Thirukural

திருக்குறள்

அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து

குறள் : 2

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழார் எனின்.

மணக்குடவர் உரை :

மேற்கூறிய வெழுத்தினானாகிய சொற்களெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின அறிவினை உடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

மு.வரதராசனார் உரை :

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

மு.கருணாநிதி உரை :

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை :

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

ஆங்கில மொழிபெயர்ப்பு :

No fruit have men of all their studied lore, Save they the ‘Purely Wise One’s ‘feet’ adore.

ஆங்கில உரை :

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

My Remarks and Opinion:

In first Kural, it is mentioned about importance of literacy and the literacy is as important as God. The eternity. In the continued second Kural, it is said, there is no point in having literacy unless we follow virtues. Here the word, ‘Valarivan’ used. This word is interpreted as ‘God’ by many. This word is interpreted as ‘wise people’ by few, like Kalaignar, who lived as an atheist. In a typical Indian society and traditional practices, where God is equal to Knowledge and they created Goddess Saraswathi. And God is equal to wealth and they created Goddess Lakshmi and God is equal to valor and they created Goddess Shakthi, and all rituals were revolving around cleanliness and the cleanliness in body and mind equaled to worshipping God, in my considered opinion, this Kural mentions the importance of following the knowledge and wisdom that one gets out of literacy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>