Thirukural

திருக்குறள்

அறம் / பாயிரவியல் / கடவுள் வாழ்த்து

குறள் : 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

மணக்குடவர் உரை :

எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

மு.வரதராசனார் உரை :

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

மு.கருணாநிதி உரை :

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை :

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

ஆங்கில மொழிபெயர்ப்பு : English Translation

‘A’, as its first of letters, every speech maintains; The “Primal Deity” is first through all the world’s domains.

ஆங்கில உரை : English Summary Explanation

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

My Remarks and Opinion:

In most languages, the first letter starts with ‘a’ or its equivalent. When did that start? When does a language started first? When did grammar and scripts started first? Whether the God is first or World is first? The first letter of all languages, the God and the world all started from the beginning. The belief of God started when the world started and at the same time the language also started.